;
Athirady Tamil News

சகோதரி திருமணத்துக்கு ரூ.8 கோடி மதிப்பில் வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்- நூற்றுக்கணக்கான வண்டிகளில் சீதனம்!!

0

அண்ணன்-தங்கை, அக்காள்-தம்பி பாசத்துக்கு எல்லை என்பது கிடையாது. அதுவும் ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் இருந்தால் அண்ணன்-தம்பிகள் தங்கள் சகோதரியின் மீது காட்டும் பாசம் அளப்பரியது. சகோதரியின் திருமணத்தின்போது அந்த பாச உணர்வை கண்கூடாக காணலாம். ராஜஸ்தான் மாநிலத்தில் 4 சகோதரர்கள் ஒன்று சேர்ந்து தங்களின் சகோதரி திருமணத்துக்கு ரூ.8 கோடி வரதட்சணை கொடுத்து தங்களின் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த சகோதரர்களின் பெயர் அர்ஜுன்ராம், பகிரத், உமைத்ஜி, பிரகலாத். ராஜஸ்தான் மாநிலம் நகார் மாவட்டத்தில் உள்ள திங்சாரா கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் சகோதரி பன்வாரிதேவி 4 சகோதரர்களும் சகோதரி பன்வாரிதேவியின் மீது பாசத்தை பொழிந்து வளர்த்து வந்தனர்.

பன்வாரிதேவிக்கு கடந்த 26-ந்தேதி திருமணம் நடந்தது. அப்போது ஊரே மெச்சும்படியாக சகோதரர்கள் 4 பேரும் சேர்ந்து ரூ.8 கோடியே 31 லட்சம் மதிப்பில் வரதட்சணை வழங்கினர். இந்த கிராமத்தில் இந்த அளவுக்கு அதிக தொகையை யாரும் இதுவரை வரதட்சணையாக வழங்கியதில்லை. இந்த வரதட்சணையில் ரொக்கப்பணம் மட்டும் ரூ.2.21 கோடி வழங்கப்பட்டது. ரூ.4 கோடி மதிப்பில் 33 ஏக்கர் நிலம், ரூ.71 லட்சம் மதிப்பில் 1 கிலோவுக்கு மேல் தங்க நகைகள், ரூ.9.8 லட்சம் மதிப்பில் 14 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.7 லட்சம் மதிப்பில் ஒரு டிராக்டர், ஸ்கூட்டர் மற்றும் குடும்பம் நடத்த தேவையான இதர பொருட்களும் சீதனமாக வழங்கப்பட்டுள்ளது.

சீதனப் பொருட்கள் அனைத்தும் திங்சாரா கிராமத்தில் இருந்து மாப்பிள்ளை வீடு இருக்கும் ரய்தானு கிராமத்துக்கு நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் ஒட்டக வண்டிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த திருமணத்தை பார்ப்பதற்கு கிராம மக்கள் அனைவருமே திருமணம் நடந்த இடத்தில் திரண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.