;
Athirady Tamil News

இரும்பு சேகரிப்பவர்கள், சட்டவிரோத மணலைக் கொண்டு செல்பவர்களாலும் போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுகின்றது – பிரதேச செயலர்கள் !!

0

யாழ்.மாவட்டத்தில் பழைய இரும்பு சேகரிப்பவர்களாலும் சட்டவிரோதமாக மணலைக் கொண்டு செல்பவர்களாலும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பரிமாற்றம் இடம்பெறுகின்றது இவற்றுக்கு எதிராக உரிய கண்காணிப்பு நடவடடிக்கைகளை எடுக்கவேண்டும் என பிரதேச செயலர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் குற்றச் செயலைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே பிரதேச செயலாளர்கள் தமது பிரிவுகளிலுள்ள குற்றச் செயல்கள் தொடர்பாக எடுத்துக்கூறியபோதே இதனைத் தெரிவித்தார்கள்.

அவர்கள் அங்கு மேலும் தெரிவிக்கையில்

குற்றச் செயல்கள் கட்டுப்படுத்துவது தொடர்பில் இம் மாதம் ஆரம்பத்தில் கலந்துரையாடிய பின்னர் ஓரளவுக்கு பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்படவுண்டும் அது மட்டுமன்றி பிரதான வீதிகளை மாத்திரம் கண்காணிக்காது மக்கள் நடமாட்ட கூடிய இடங்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் ரோந்து நடவடிக்கைகள் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் அவதானிக்கும் போது பழைய இரும்பு சேகரிப்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாக மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் மீதும் அதிகளவான கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.

இவர்கள் ஊடாக போதைப்பொருள் கடத்தப்படும் அதே நேரத்தில் போதைப்பொருள் பரிமாற்றமும் இடம்பெற்று வருவதாக பொதுமக்களினால் முறைப்பாடு கிடைக்கப்பபெற்றுள்ளது எனவே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் மீது உரிய சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்

மேலும் தீவகப் பகுதிகளில் மண்டைதீவு மற்றும் புங்குடுதீவுப் பகுதிகளில் தொடர்ச்சியாக சோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும் இங்கு தீவகப்பகுதியில் காணப்படுகின்ற கால் நடைகள் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு அவை இறைச்சிக்காக பயன்படுத்துவதற்கு புங்குடுதீவில் இருந்து கடலால் கடத்தப்பட்டு யாழ் நகர் கொண்டு செல்லப்படுகின்றது.

எனவே புங்குடுதீவில் விசேட சோதனை நடவடிக்கையையும் அதேபோன்று மண்டைதீவுச் சந்தியிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

இப் பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் மூலம் தான் கால் நடை மற்றும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது பரிமாற்றப்படுவதை ஓரளவேனும் கட்டுப்படுத்தமுடியும்.

எனவே இவ் விடையத்தில் கூடிய கவனம் செலுத்தி குற்றச் செயல் மற்றும் போதைப் பொருட் கடத்தலை கட்டுப்படுத்த வேண்டும் என கேரிக்கை முன்வைக்கப்பட்டது.

இக் கலந்தரையாடலில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேசசெயலாளர்கள் பிரதேச சபைச் செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் கடற்றொழில் பிரதிநிதிகள் முப்படையின் பிரதானிகள் கலந்துகொண்டார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.