பெல்ஜியம் சாக்லேட்டில் உருவான வண்ண ஈஸ்டர் முட்டைகள்: சமையல் கலைஞர்கள் வடிவமைத்த முட்டைகளை ரசித்த மக்கள்!!
பெல்ஜியத்தில் சாக்லேட் கொண்டு சமையல் கலைஞர்கள் உருவாக்கியுள்ள ஈஸ்டர் முட்டைகளை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். முட்டையிலிருந்து புதிய உயிர் தோன்றுவது போல கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கருதும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையின் போது ஈஸ்டர் முட்டைகளுக்கு முக்கியத்துவம் கருதுகின்றனர். அந்த வகையில் பெல்ஜியத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சமையல் கலைஞர்கள் வடிவமைத்த முட்டைகள் காட்சிப்படுத்த பட்டிருந்தன.
சுமார் 60 செ.மீ உயரம் கொண்ட முட்டைகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தன. இதில் 45 கிலோ எடையில் ஊதா நிறத்தில் பிரிட்டன் கலைஞர் உருவாக்கிய முட்டை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதே போல பருவநிலை மாற்றத்தை குறிக்கும் வகையில் உலக வரைபடத்துடன் கூடிய வெள்ளை நிற முட்டையை பிரெட்ரிக் பிளான்டில் என்பவர் வடிவமைத்திருந்தார். இந்த முட்டை கண்காட்சியானது அடுத்தமாதம் 9ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.