நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டி பிரசாரம்: ஆம் ஆத்மி நடவடிக்கை!!
நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிராக ‘மோடியை விரட்டுவோம், தேசத்தை காப்போம்’ என்ற சுவரொட்டி பிரசாரத்தை ஆம் ஆத்மி நேற்று தொடங்கியது. இதுகுறித்து அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் கூறியதாவது:- பா.ஜனதா அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதை மக்களுக்கு உணர்த்தவே இந்த பிரசாரத்தை தொடங்கி இருக்கிறோம்.
22 மாநிலங்களில் வெவ்வேறு மொழிகளில் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளோம். ஏப்ரல் 10-ந்தேதியில் இருந்து இந்த பிரசாரத்தை மாணவர்களும் அறிந்து கொள்ளும்வகையில், அனைத்து பல்கலைக்கழங்களிலும் சுவரொட்டி ஒட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.