பயணிக்கு சிறுநீரகம் தானம் செய்த கார் டிரைவர்!!
மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் சம்பவங்களை பார்க்கும் போதும், படிக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த டிம் லெட்ஸ் என்ற ஊபர் டிரைவர் ஒருவர் தனது காரில் பயணித்த பில்சுமியேல் என்ற பயணிக்கு சிறுநீரக தானம் செய்தது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. பில்சுமியேல் ஒருமுறை டயாலிசிஸ் மையத்திற்கு டிம்லெட்ஸ்சின் காரில் சென்றுள்ளார். அப்போது தனது உடல் நல பிரச்சினைகள் குறித்து அவர் டிரைவருடன் உரையாடி உள்ளார்.
அதை கேட்ட டிம்லெட்ஸ் மனமுருகி தனது சிறுநீரகத்தை தானம் செய்ய முன் வந்துள்ளார். அதன்படி அவர் சுமியலுக்கு சிறுநீரகத்தை தானம் செய்துள்ளார். இதற்கான அறுவை சிகிச்சை கடந்த வருடம் வெற்றிகரமாக நடந்தது. தற்போது சுமியேல் நன்றாக இருக்கிறார். அவர் டிரைவர் டிம்லெட்சுடன் ஆஸ்பத்திரியில் இருந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது வாழ்க்கை கதையை கூறி இருந்தார். அவரது இந்த பதிவு 1 லட்சத்து 83 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.