அத்தியாவசிய பொருள் விலைகள் குறைப்பு !!
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் மூன்றின் மொத்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்தது.
230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 210 ரூபாயாகவும் 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி 200 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பருப்பு 310 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.