ரஷ்யா கொலைகாரர்களுக்கு நியாயமான தண்டனை கிடைக்கும் – ஜெலென்ஸ்கி சூளுரை !!
ரஷ்யா போர் வீரர்களுக்கு நியாயமான தண்டனை கிடைக்கும் என உக்ரேனிய மக்களுக்கு ஆற்றிய உரையில் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
புச்சா உச்சி மாநாடு புச்சாவில் இருந்து ரஷ்யா விலகியதன் ஓராண்டு நிறைவைத் தொடர்ந்து, கீவ் உச்சி மாநாட்டில் அதிபர் ஜெலென்ஸ்கி உரையாற்றினார்.
அப்போது அவர், உக்ரைனில் நடந்த போர்குற்றங்களுக்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் உரையாற்றிய ஜெலென்ஸ்கி, ‘நூறு சதவீதம் அனைத்து ரஷ்யா கொலைகாரர்களுக்கும் நியாயமான தண்டனை கிடைக்கும்.
நாங்கள் அதனை உறுதி செய்வோம். அதற்கான வழிகளையும், விதிகளையும் கண்டுபிடிப்போம். புச்சாவை நீதியின் சின்னமாக மாற்றுவதற்கு நாம் அனைத்தையும் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ரஷ்யா கொலைகாரன், மரணத்திற்கு காரணமானவன், பயங்கரவாதி ஒவ்வொரு குற்றத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்’ என தெரிவித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, ரஷ்யா ஆக்கிரமிப்பின் கீழ் புச்சாவில் இறந்த அனைவரின் நினைவாக, உக்ரைனுக்கு வருகை தந்த வெளிநாட்டு தலைவர்களுக்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார்.