;
Athirady Tamil News

அல்வா அமித்ஷாவுக்கா? அல்லது எடப்பாடிக்கா?!!

0

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமித்ஷா தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி தொடருகிறது என்று அறிவித்தார். அவர் அறிவித்த மறுநாளே எடப்பாடி பழனிசாமியும் பா.ஜனதாவுடன் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று அறிவித்தார். இருவரது அறிவிப்பினையும் தொடர்ந்து இரு கட்சிகளிடமும் இருந்த நெருக்கடிகள் தளர்ந்தது என்றே சொல்ல வேண்டும். பா.ஜனதாவை பொறுத்தவரை தமிழகத்தில் தனக்கு ஒரு துணை தேவை என்பதில் கவனமாக உள்ளது. அதே நேரம் அ.தி.மு.க.விலோ நமக்கு ஏற்ற துணை பா.ஜ.க. இல்லை என்ற எண்ணம் ஒரு சில நிர்வாகிகளிடம் இருக்கத்தான் செய்கிறது.

அதற்குக் காரணம் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்ற நம்பிக்கைதான். முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி பொன்னையன், சி.வி.சண்முகம் ஆகியோர் அந்த எண்ணத்தில் உறுதியாகவே இருக்கிறார்கள். என்னண்ணே… கூட்டணி பற்றி கேட்டால் தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம் என்று சொல்லி இருக்க வேண்டியது தானே. இப்பவே பா.ஜனதாவோடு ஏன் கமிட் ஆக வேண்டும் என்று கேட்டார்களாம்! அதற்கு எடப்பாடி பழனிசாமி நான் பொதுச்செயலாளர் ஆகி விட்டேன். கட்சி இப்போதுதான் இயல்பு நிலைக்கு வந்திருக்கு.

கட்சியை வளர்க்க இன்னும் நிறைய வேலைகள் உள்ளன. அவர் (ஓ.பி.எஸ்.) 2024 தேர்தல் வரைவிடாமல் தொல்லை கொடுக்கத்தான் செய்வார். கோர்ட்டில் நாம் வெற்றி பெற்றாலும் கடைசியில் தேர்தல் ஆணைய அங்கீகாரம் தேவை. அதற்கு பா.ஜனதா ஒத்துழைப்பு அவசியம். எனவே இப்போதே கூட்டணி இல்லை என்று சொல்லி ஏன் அவர்களை பகைக்க வேண்டும்? தேர்தல் ஆணையத்திலும் நமது வெற்றி உறுதியான பிறகு கூட்டணி பற்றி முடிவெடுக்கலாம். இப்போதைக்கு இப்படித்தான் அறிவிக்க வேண்டும் என்றார். உண்மையிலேயே அல்வா அமித்ஷாவுக்கா? எடப்பாடி பழனிசாமிக்கா?.

You might also like

Leave A Reply

Your email address will not be published.