பலா கன்று நாட்டும் நிகழ்வு !!
”விமானப்படையின் ஹெரலி பெரலி” திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 3 மில்லியன் பலா மரங்களை நாட்டும் நிகழ்வின் முதற்கட்ட பணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க தலைமையில் அநுராதபுர விமான படைத்தளத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சந்தையில் பலாவின் கேள்வியை உருவாக்குதல் மற்றும் இலங்கை மக்களிடையே பலாப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக அரச உணவுப் பாதுகாப்பு திட்டத்துடன“ இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் எழுபத்தைந்தாயிரம் பலா மரக் கன்றுகள் இந்த ஆண்டில் நாட்ட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
”விமானப்படையின் ஹெரலி பெரலி ” என்ற பலாப் பயிர்ச்செய்கை தொடர்பான புத்தகமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் பண்டார தென்னக்கோன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சகல ரத்நாயக்க, பாதுகாப்புத்துறை செயலாளர் கமல் குணரத்ன (ஓய்வு ) உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.