36 பக்தர்கள் உயிரை பறித்த கிணறு.. கோவில் கட்டுமானம் இடித்து அகற்றம்!!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராம நவமியையொட்டி பாலேஷ்வர் மகாதேவ் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது கோவில் படிக்கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பழைய கோவில் அருகே புதிதாக சட்டவிரோதமாக கோவில் கட்டுமான பணிகள் நடைபெறுவது தெரியவந்தது.
இதையடுத்து அந்த கட்டுமானங்களை இடித்து அகற்றும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அந்த கோவில் கட்டுமானங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிணறுகளின் மீது கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கோவில் கட்டுமானம் இடிக்கப்பட்டதாகவும், இதுவரை நான்கு கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன என்றும், இந்தூர் கலெக்டர் இளையராஜா தெரிவித்தார்.