குளிர்கால வைரஸ் தொற்று!! (மருத்துவம்)
குளிர் காலத்திலிருந்து கோடைக்காலத்துக்கு மாறும் போது, பருவநிலை தாக்கத்தால், பொதுவாக ஏற்படும் பிரச்சினை வைரஸ் தொற்று. இதனால், முதலில் பாதிக்கப்படுவது, சுவாச மண்டலம்.
குழந்தைகள், வயதானவர்கள், கொழுப்பு அதிகம் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஆஸ்துமா பாதிப்பு, நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்களை, வைரஸ் தொற்று இலகுவாகப் பாதித்துவிடும்.
சூழல் மாசு அதிகம் இருப்பதும், வைரஸ் தொற்றுக்குக் காரணம். வைரஸ் தொற்றால், இருமல், சளி, தொண்டை வலி, கண் எரிச்சல், கண்கள் சிவந்து போவது போன்ற அறிகுறிகள் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள்.
எச்சிலுடன் சேர்த்து இரத்தம் வரும்போது, பதற்றம் ஏற்படும். இது, தீவிரத் தொற்றின் ஓர் அறிகுறி. சுவாசப் பாதையிலுள்ள ‘மியுக்கஸ்’ எனப்படும் சவ்வில் ஏற்பட்ட தீவிர தொற்றுக் காரணமாவே, எச்சிலும் இரத்தமும் கசிகின்றது. ஆனால், இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால், பயப்படத் தேவையில்லை.
பெரும்பாலானவை, தானாகவே சரியாகி விடும். மூன்று நாள்களுக்குள் சரியாகாமல், அறிகுறிகள் அதிகரிப்பது, ஆஸ்துமா போன்ற உடல் பிரச்சினை இருப்பவர்களுக்கு, சளியுடன் இரத்தம் வருவது ஆகியவை, இரண்டாம் நிலை பக்டீரியா தொற்றாக இருக்கலாம் என்பதால், தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
குடை எடுத்துச் சென்றால், மழை, வெயில், பனி என, எந்தவொரு பாதிப்பும், நேரடியாகத் தலைக்கு விழாது. அந்தந்த வானிலைக்கு ஏற்றால் போன்ற ஆடைகளையும் உணவு பழக்கவழக்கங்களையும் நீங்கள் கொண்டிருந்தால், வருவதற்கு முன்னரே தடுத்துக்கொள்ளலாம்.