;
Athirady Tamil News

மட்டக்களப்பு – விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடபவணி!! (PHOTOS)

0

மட்டக்களப்பு – விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடபவணி இன்று இடம்பெற்றது.

மன்முணை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் கடந்த மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்றது.

தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேக பூசை இடம்பெற்று இன்று காலை பாற்குடபவணியும், சங்காபிஷேகமும் இடம்பெற்றது.

காலை சொறுவாமுனை அருள்மிகு ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயத்தில் இருந்து விஷேட பூஜைகளுடன் ஆரம்பமான பாற்குடபவணியானது பிரதான வீதியின் ஊடாக அரோகோரா கோசத்துடன் அடியார்கள் தமது சிரசில் பாற்குடங்களை சுமந்துவந்து மூலவர் மூர்த்தியான ஸ்ரீ சித்தி விநாயக பொருமானுக்கும் ஏனைய தொய்வங்களுக்கும் பாலாபிஷேகம் இடம்பெற்று தொடர்ந்து விஷேட பூஜைகளும் இடம்பெற்றிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.