;
Athirady Tamil News

செலவுகளை குறைக்க மசாஜ், கபே, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கைவிட கூகுள் நிறுவனம் முடிவு : ஊழியர்கள் கொந்தளிப்பு!!!

0

ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ள கூகுள் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்து அதன் ஊழியர்கள் லண்டனில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொருளாதார மந்தநிலையை காரணம் காட்டி கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் உலகம் முழுவதிலும் இருந்து 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அத்துடன் பொருளாதார மந்த நிலையை கருத்தில்கொண்டு, செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களுக்கு வழங்கி வந்த மசாஜ், கபே, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சேவைகளை கைவிட கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மேலும் அலுவலகங்களில் இனி ஸ்டேபிளர், செலோடேப்கள் கூட வழங்கப்படாது எனவும் கூறப்படுகிறது. கூகுளின் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், தங்களது ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக பணியை புறக்கணித்து லண்டனில் உள்ள தலைமை அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பதாகைகள் பிடித்தும் கரகோஷம் எழுப்பியும் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்கத்தினர் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கும் நிறுவனம் செவி சாய்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.