கண் சொட்டு மருந்தால் 3 பேர் பலி; 8 பேருக்க கண்பார்வை இழப்பு: சென்னை நிறுவனம் மீது அமெரிக்கா எதிர்ப்பு!!
சென்னையை சேர்ந்த நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்தியதால் பார்வை பறி போனதாக அமெரிக்கா குற்றசாட்டியிருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த குலோபர் பார்மா ஹெல்த் கேர் நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்திய 3 பேர் உயிரிழந்ததாகவும், 8 பேரின் கண் பார்வை பறி போனதாகவும் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை அமெரிக்கா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் முன் வைத்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது இதே போன்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 இருமல் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு தடை விதித்திருந்தது. இந்நிலையில், கண் பார்வை பறிபோக காரணமான சொட்டு மருந்து தயாரிப்பை நிறுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இந்திய சுகாதாரத்துறைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புகாருக்கு பதில் அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கண் சொட்டு மருந்துகளின் மாதிரிகள் பாக்டிரியா மாசுபாடு கண்டறியப்படவில்லை என மறுத்துள்ளது. தரக்கட்டுப்பாட்டு செயல்முறை விதிகளின் படி கண் சொட்டு மருந்துகள் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், அமெரிக்காவின் குற்றச்சாட்டை சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகரிகள் மறுத்துள்ளனர்.
தாங்கள் நிறுவனத்தின் கண் சொட்டு மருந்து மீதான புகார் எழுந்தது கடந்த பிப்ரவரி மாதமே மருந்து தயாரிப்பதை தாமதமாக நிறுத்தி விட்டது. சென்னையை சேர்ந்த குலோபர் பார்மா ஹெல்த் கேர் நிறுவனம் இந்நிலையில் மருந்து நிறுவனத்தின் மீதான விசாரணை நடைபெற்று வருவதால் விசாரணை முடியும் வரை இந்த நிறுவனத்தில் கண் சொட்டு மருந்து உள்பட கண் பராமரிப்பு தொடர்பான எவ்வித மருந்தும் தயாரிக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.