;
Athirady Tamil News

கை விலங்கோடு கடலில் நீந்தி வரலாற்றில் மறக்க முடியாத சாதனை படைத்த வீரர்!

0

எகிப்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் கை விலங்கோடு 11 கிலோமீற்றர் தூரம் நீச்சல் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

எகிப்து நாட்டை சேர்ந்த நீச்சல் வீரர் ஷேகப் அல்லாம்(Sehab Allam) என்பவரே கையில் விலங்கோடு அதிக தூரம் நீந்தி சென்று உலக சாதனை படைத்துள்ளார்.

அவர் சரியாக 6 மணி நேரத்தில் 11.649 கி.மீ தூரம் நீந்தி சென்று உலக சாதனை படைத்துள்ளார்.

அரேபிய நாட்டில் நடைபெற்ற திறந்த வெளி நீச்சல் போட்டியில் பங்கு பெற்ற ஷேகப் அல்லாம் கையில் விலங்கு பூட்டிக் கொண்டு நீந்தும் போது உதவி படகுகள் தன்னை பின் தொடர மறுத்துவிட்டார்.

”போட்டிக்காக பயிற்சி செய்யும் போது ​​நான் கைவிலங்கு அணிந்து நீந்துவதைப் பார்க்க கூட்டம் கூடிவிடும். இதனால் நான் அமைதியான பகுதிகளில் நீந்த விரும்புகிறேன், பொதுவாக கடற்கரைகளின் ஓரங்களில் நான் பயிற்சி எடுப்பேன்” என செய்தியாளர்களிடம் ஷேகப் கூறியுள்ளார்.

”போட்டியை முடித்து சான்றிதழை கையில் வாங்கும் வரை என்னால் எதைப் பற்றியும் சிந்திக்க முடியவில்லை. தற்போது உலக சாதனை படைத்த நீச்சல் வீரராக இருப்பது பெருமையாகவுள்ளது. என்னால் முடிந்த வரை இந்த சாதனையை தக்க வைக்க முயல்வேன்” என தெரிவித்துள்ளார்.

”6 மணி நேரத்தில் ஷேகப்பால் படைக்கப்பட்ட இச்சாதனை அசாத்தியமானது. இவரது சாதனை உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். இதன் மூலம் மனித சக்தியால் முடியாதது ஒன்றுமில்லை என்பது நிரூபணமாகியுள்ளது” என கின்னஸ் சாதனை அமைப்பு கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.