தம்புள்ளையில் மரக்கறி விற்பனையில் வீழ்ச்சி!!
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு விற்பனையாளர்கள் இன்மையால் 06 நாட்களாக விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 06 நாட்களாக ஒரு கிலோ பூசணிக்காயின் மொத்த விலை 15 ரூபாவாக காணப்பட்டதுடன், ஒரு கிலோ போஞ்சி மொத்த விற்பனை விலையும் 60 தொடக்கம் 80 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஏனைய அனைத்து மரக்கறிகளின் விலைகளும் 70 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், காய்கறிகள் விற்பனை செய்யப்படாமை பாரிய பிரச்சினையாக காணப்படுவதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.