சொந்த வீடு வாங்க பின் நிற்கும் கனேடிய மக்கள் – வெளியான கருத்து கணிப்பு !!
கனடாவில் சொந்த வீடு வாங்கும் திட்டத்தை பலர் கைவிட்டு விட்டதாகத் கருத்து கணிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆண்டு வீட்டு விலை குறிப்பிடத்தக்களவு அளவில் குறைந்த போதிலும், வீடு விற்பனை எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டுள்ளது.
வீடு ஒன்றை கொள்வனவு செய்யும் இயலுமை மக்கள் மத்தியில் வெகுவாக குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சொந்த வீடு கொள்வனவு செய்யும் கனவுடன் இருந்த 63 வீதமானவர்கள் தங்களது எண்ணத்தை கைவிட்டு விட்டுள்ளனர்.
மேலும், பணம் படைத்தவர்களினால் மட்டுமே வீடுகளை வாங்க செய்ய முடியும் என 70 வீதமான மக்கள் கருதுவதாக கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.