;
Athirady Tamil News

துபாயில் பேருந்து விபத்தில் படுகாயமடைந்த இந்தியருக்கு ரூ.11 கோடி இழப்பீடு!!

0

இந்தியாவை சேர்ந்தவர் முகமது பைக் மிர்சா (20). பொறியியல் படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டில் துபாயில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற முகமது, ஓமனில் இருந்து ஐக்கிய அமிரகத்திற்கு பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தபேது பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 31 பயணிகளில் 17 பேர் உயிரிழந்தனர். இதில், 12 பேர் இந்தியர்கள் ஆவர். முகமது உள்பட பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3.4 மில்லியன் திர்ஹம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த விபத்தில் படுகாயங்கள் அடைந்த முகமது துபாயில் உள்ள மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்தார். 14 நாட்கள் சுயநினைவின்றி இருந்தார்.

அதன் பிறகு மறுவாழ்வு மையத்திலும் சிகிச்சை பெற்றார். விபத்தால் முகமதுவுக்கு மூளையில் பலத்த காயம் ஏறபட்டதால் படிப்பு தொடர முடியாமல் போனது. மேலும், அவரது மண்டை ஓடு, காதுகள், வாய், நுரையீரல், கைகள் மற்றும் கால்களில் ஏற்பட்ட காயங்களும் தடயவியல் மருத்துவ நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்பட்டன. முகமதுவின் மூளையில் 50 சதவீதம் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையின் அடிப்படையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உச்ச நீதிமன்றம் காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதன்மூலம் முகமதுவுக்கு ரூ.11 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.