;
Athirady Tamil News

சீனாவின் பதற்ற சூழல் – விண்வெளி வர்த்தக முன்னணியில் இந்தியா..!

0

விண்வெளி துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு இணையாக இந்தியாவும் வளர்ச்சியடைந்து வருகிறது.

அதிவிரைவான இணையதள சேவையை வழங்குவதற்காக, செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தி சுற்று வட்டப்பாதையில் நிறுத்தும் வர்த்தகம் செழிப்படைந்து வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டில் ரூ.3,663,344 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடந்தது. வருகிற 2025-ம் ஆண்டில் இதன் மதிப்பு ரூ.4,917,240 கோடியாக வளர்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள்களை ஏவுவதில் முக்கிய பங்காற்றி வந்த நாடுகளாக ரஷ்யா மற்றும் சீனா காணப்பட்டன.

எனினும், உக்ரைன் போர் மற்றும் அமெரிக்காவுடனான சீனாவின் பதற்ற சூழல் ஆகியவற்றால் புதுப்புது வாடிக்கையாளர்களை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தற்போது செயற்கைக்கோள் ஏவும் பணிக்கு தற்போது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஒன்றையே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.

இந்த சூழல், இந்தியாவுக்கு அதிரடியாக கைகொடுத்துள்ளது.

இதுபற்றி விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றான நார்தர்ன்ஸ்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை நிபுணர் டல்லாஸ் கசபோஸ்கி கூறும்போது

“அரசியல் ரீதியாக இந்தியா ஒரு சிறந்த இடத்தில் உள்ளது. ஒருவேளை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஆனது, நிறைந்து விட்டாலோ, பரபரப்புடன் இயங்கி அல்லது அதிக பொருட்செலவை ஏற்படுத்தினாலோ நீங்கள் வேறிடம் தேட வேண்டியிருக்கும்.

அதற்கு சீனாவையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. சீனாவின் மேற்கத்திய தொழில்நுட்பம் சார்ந்த விசயங்களால், பல செயற்கைக்கோள் இயக்கும் நிறுவனங்களுக்கு சீனா ஒரு சிறந்த தேர்வாக இருக்காது.

அமெரிக்கா மற்றும் பிற சக்தி படைத்த நாடுகளான அவுஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா நெருங்கி செயலாற்றி வருகிறது.

போட்டி நாடுகளை விட இந்தியாவில் செலவும் குறைவு என தகவல் தெரிவிக்கின்றது. பிரதமர் மோடியின் “மேக் இன் இந்தியா” பிரசாரத்தில் விண்வெளி துறை ஒரு முக்கிய பங்காற்றி வருகிறது.

தொழில்நுட்ப கண்டுபிடிப்பில், முன்னணியில் இருப்பதுடன், உலகின் 5-வது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இலக்காக இந்தியா கொண்டு உள்ளது.

அதனால், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவித்து வர்த்தக நட்பு சார்ந்த ஒன்றாக இந்திய விண்வெளி துறையை உருவாக்க அரசு முயற்சித்து வருகிறது.

இதற்கு இந்தியாவின் நியூஸ்பேஸ் என்ற நிறுவனம் கைகொடுத்துள்ளது.” என தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும்போது தோல்வி அடைவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பது ஏற்கப்பட்டாலும், இந்தியா திறமையாகவே செயல்படுகிறது என ஹார்வர்டு பல்கலை கழகத்தின் வானியல் இயற்பியலாளர் ஜோனாதன் மெக்டோவல் கூறுகிறார்.

அதற்கு சான்றாக, 2013-ம் ஆண்டில் செவ்வாய்க்கு இந்தியா அனுப்பிய ஆர்பிட்டர் ஒன்றின் செலவு, அதே ஆண்டில் நாசா அனுப்பிய விண்வெளி ஆய்வு விண்கலத்தின் செலவை விட 10-ல் ஒரு பங்கு அளவே இருந்தது. அதனால், குறைந்த செலவில் பெரிய ஏவுதிறனுடன் உள்ள நாடுகள் அதிகம் இல்லை என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.