உக்ரைன் படைகளுக்காக அமெரிக்கா – நேட்டோ தயாரித்த இரகசிய யுத்த ஆவணங்கள் கசிவு!
உக்ரைன் இராணுவத்தை வலுப்படுத்தும் திட்டங்களைக் கொண்ட இரகசிய யுத்த ஆவணங்கள் சமூக ஊடகங்களில் கசிந்துள்ளன.
ரஷ்ய படைகளின் தாக்குதல்களை சமாளிப்பதற்கும், உக்ரைனிய இராணுவத்தை தயார்படுத்தும் திட்டங்களையும் உள்ளடக்கிய குறித்த ஆவணங்களே தற்போது கசிந்துள்ளது.
இந்த ஆவணங்களை அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டணி நாடுகள் இணைந்து தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டுவிட்டர்(Twitter) மற்றும் டெலிகிராம்(Telegram) ஆகிய தளங்களில் இந்த ஆவணங்கள் பகிரப்பட்டுள்ளாதாகவும், அவற்றில் சில மாற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் மற்றும் தற்காப்பு அமைச்சு ஆகியவை இணைந்து ஆவணம் வெளியான விடயம் குறித்து ஆராய்ந்து வருவதாக சொல்லப்படுகின்றது.
அமெரிக்க நிர்வாக அதிகாரிகள் சமூக ஊடகத்தில் கசிந்த இரகசிய ஆவணங்களை அகற்ற முயற்சிப்பதாகவும், இதுவரை அது முழுமையாக சாத்தியமானதாகத் தெரியவில்லை எனக் கூறப்படுகின்றது.