உக்ரைன் அதிபரை சந்திக்கவுள்ள சீன அதிபர்!
உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடங்கள் கடந்தநிலையில், தற்போது சீனா உக்ரைனின் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எண்ணியுள்ளது.
சீன அதிபர் சி சின்பின் (Xi Jinping) ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சலா வோன் டெர் லேயன் (Ursula von der Leyen) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் பின்னர் குறித்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, சீன அதிபரும், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோனும் (Emmanuel Macron) சந்தித்து பேசியுள்ளனர்.
குறித்த சந்திப்பின் பின்னர், ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்புக்குச் சீனா ஆதரவு வழங்கக்கூடாது என ஐரோப்பிய ஒன்றியமும், பிரான்ஸும் சீன அதிபரிடம் தெரிவித்துள்ளது.
உக்ரேன் மீதான படையெடுப்பு அனைத்துலக சட்டத்தைத் தெளிவாக மீறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளும், நேரமும் சரியாக அமையும் போது, அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சீன அதிபர் சி சின்பின் கூறியுள்ளார்.
கடந்த மாதம் சீன அதிபர் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி சீனத் தலைவரை சந்திப்பதற்கு பலமுறை கோரிக்கை விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.