மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார் தென்கொரிய மந்திரி !!
இந்தியா, தென் கொரியா இடையே தூதரக ரீதியிலான நட்புறவு ஏற்படுத்தப்பட்டதன் 50-வது ஆண்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அரசுமுறைப் பயணமாக தென்கொரிய வெளியுறவு மந்திரி பார்க் ஜின் இன்று இந்தியா வந்தடைந்தார். அவரை தூதரக அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்தித்தார். இந்நிலையில், தென்கொரிய வெளியுறவு மந்திரி பார்க்ஜின் டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்தார்.
இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியாவிற்கு தனது முதல் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள தென் கொரிய வெளியுறவு மந்திரி பார்க் ஜினை வரவேற்பதில் மகிழ்ச்சி. இன்றைய எங்கள் விவாதங்கள் நமது சிறப்பு மூலோபாய கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்லும் என பதிவிட்டுள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரையும் தென் கொரியா வெளியுறவு மந்திரி சந்திக்கிறார்.