முதன்முறையாக இந்திய போர் விமானத்தில் பயணம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு!!
ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக அசாம் மாநிலம் சென்றுள்ளார். இன்று அவர் தெஸ்பூர் விமானப்படை மையத்துக்கு சென்றார். அங்கு அவரை கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா, முதல்- மந்திரி ஹிமாந்த பிஸ்வாசர்மா, மற்றும் ஏர்- மார்ஷல் தர்கர் ஆகியோர் வர வேற்றனர். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்திய விமான படைக்கு சொந்தமான சுகோய் 30 எம்.கே.ஐ போர் விமானத்தில் பயணம் செய்தார்.
குரூப் கேப்டன் நவீன்குமார் திவாரி அந்த விமானத்தை இயக்கினார். சிறிது தூரம் வானில் பறந்து சென்ற அந்த போர் விமானம் பின்னர் தரை இறங்கியது. ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக திரவுபதி முர்மு போர் விமானத்தில் பயணம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.