சாப்ட்வேர் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி!!
ஆந்திர மாநிலம்பொம்மல சமுத்திரம், நம்டியால போக்குவரத்து போலீசில் போலீஸ்காரராக சிவைய்யா என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் பிரபல சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் முதல் 10 லட்சம் வரை பலரிடம் பணம் வாங்கியுள்ளார். பணம் வாங்கியவர்களிடம் பல்வேறு சாப்ட்வேர் நிறுவனங்களின் போலியான ஈமெயில் ஐடி, வாட்ஸ் அப்பில் வேலைவாய்ப்பு கடிதங்களை போலியாக தயாரித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் சிவைய்யா கொடுத்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அங்கு எந்த ஒரு நிறுவனமும் இல்லை என்பதை கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் பணம் கொடுத்து ஏமாந்து விட்டதாக சிவைய்யாவிடம் பணத்தை திருப்பி கேட்டனர். அவர் சரியான பதில் சொல்லாததால் சிவைய்யா வேலை செய்யும் போலீஸ் நிலையம் முன்பாக குவிந்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சிவைய்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது சாப்ட்வேர் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் போலீசிலும் வேலை வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் சிவைய்யாவிடம் எவ்வளவு பேர் எவ்வளவு பணம் கொடுத்து ஏமாந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.