பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 20 கி.மீ. தூரம் ஜீப் சவாரி சென்ற பிரதமர் மோடி!!
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் உள்ள பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து, 50-வது ஆண்டு பொன்விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி மைசூருக்கு வந்தார். மைசூருவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மைசூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி நேற்று இரவு தங்கி ஓய்வெடுத்தார். இன்று காலை 6.20 மணியளவில் ஓட்டலில் இருந்து காரில் ஓவெல் மைதானத்திற்கு பிரதமர் மோடி சென்று ஹெலிகாப்டர் மூலமாக அவர் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா மேலுகாமனஹள்ளிக்கு சென்றார். பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு சென்ற பிரதமர் மோடி வனப்பகுதியில் 20 கிலோ மீட்டர் தூரம் சபாரி அணிந்து சென்று வனவிலங்களை பார்வையிட்டார். இதை தொடர்ந்து புலிகள் காப்பகத்தின் 50-வது ஆண்டு பொன் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். பொன்விழா காணும் பந்திப்பூர் புலிகள் காப்பகம் 1973-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 18 ஆயிரத்து 278 சதுர கிலோ மீட்டரில் முதலில் 9 புலிகள் விடப்பட்டு இருந்தது.
தற்போது 75 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 53 புலிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பொன்விழா நிகழ்ச்சியின்போது கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த விழாவில் புலிகள் திட்டத்தின் 50 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் ‘புலிகள் திட்டம்’ நினைவு நாணயமும் வெளியிடப்பட்டது. பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 20 கி.மீ. ஜீப் சவாரி செய்தார். கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி 20 கி.மீ. தொலைவுக்கு ஜீப் சவாரி மேற்கொண்டு வனப்பகுதியைப் பார்வையிட்டார்.
பந்திப்பூர் காப்பகத்தில் புகழ்பெற்ற புலிகள் மற்றும் யானைகள் தவிர, கரடிகள், இந்திய மலைப்பாம்புகள், குள்ளநரிகள், நான்கு கொம்பு மான்கள் உள்ளிட்ட பல உயிரினங்களை பிரதமர் மோடி தனது ஜீப் சவாரியின்போது பார்வையிட்டார். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான புலிகள் கணக்கெடுப்பில் நாட்டிலேயே கர்நாடகம் 2-வது இடத்தில் இருந்தது. தற்போதைய கணக்கெடுப்பு அறிக்கையின் மூலம் புலிகள் அதிகம் உள்ள மாநிலங்களில் கர்நாடகம் முதலிடத்தை பிடித்துள்ளது. பந்திப்பூர் நிகழ்ச்சியை முடித்து தமிழ்நாடு நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் புறப்பட்டார். பின்பு மீண்டும் மைசூரு வந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார். பிரதமர் வருகையையொட்டி மைசூரு மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு மக்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. கர்நாடகாவின் மைசூரு-ஊட்டி நெடுஞ்சாலையில் உயர்ந்து நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகிய சுற்றுப்புறங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இது நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தின் ஒரு முக்கிய பகுதியாகும், இது கர்நாடகாவின் ராஜீவ் காந்தி தேசிய பூங்கா (நாகரஹோல்) அதன் வடமேற்கிலும், தமிழ்நாட்டின் முதுமலை வனவிலங்கு சரணாலயத்திலும் உள்ளது. தெற்கு மற்றும் கேரளாவின் வயநாடு வனவிலங்கு சரணாலயம் அதன் தென்மேற்கில் உள்ளது.
நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பழைய மகாராஜாக்களின் தனியார் வேட்டையாடும் மைதானமாக இருந்த பந்திப்பூர் புலிகளுடன் நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. புலி மற்றும் அதன் வாழ்விடத்தை காப்பாற்றுவதற்காக நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட முப்பது காப்பகங்களில் ஒன்று, இது அழிந்து வரும் ஆசிய காட்டு யானைகளின் கடைசி புகலிடங்களில் ஒன்றாகும் என்று மாநில சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 9 முறை பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு வருகை தந்திருக்கிறார். இது அவருடைய 10வது பயணமாகும்.