ஜலதோஷத்தை உடனே போக்கும் திரிகடுக தேநீர் !! (மருத்துவம்)
ஜலதோஷம், சளி, காய்ச்சல், இருமல் என மருந்துகளை அதிகமாக வாங்கி வந்து சாப்பிடுவதற்கு பதிலாக, இயற்கை மருந்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெற்றுகொள்ளலாம்.
ஜலதோஷம் சாதாரணமாக வந்து, நம்மை மிக அதிகமாகப் பாடுபடுத்திவிடுகின்றது. மூக்கை சிந்திக்கொண்டு அல்லது தொண்டை கட்டிக்கொண்டு, அவஸ்தையில் தவிர்ப்பதும், அதனால் உண்டாகும் சிரமங்களும் பலவுள்ளன. மருந்து சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும், உடலில் இயற்கையாகவே உள்ள நோய் எதிர்ப்பு தன்மை காரணமாக, ஒரு வாரத்தில் சரியாகிவிடும்தான்.
எனினும், ஜலதோஷத்தை போக்க மிக எளிமையான தீர்வுகள் உள்ளன. மூலிகை மருந்துக்கடைகளில், திரிகடுகம் என்று ஒரு முக்கூட்டு மருந்து கிடைக்கும், அதை வாங்கி, சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி எனும் அருமருந்துகள் சரியான விகிதத்தில் கலந்த கலவை அது. மிக நல்ல சித்த மருந்தாகும்.
உடலின் அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்யும் அருமருந்தாக விளங்கும், இதன் பலன்கள் ஏராளம். இதனை தேநீர் தயாரித்து குடித்துவர ஜலதோஷத்தை உடனடியாக போக்கிக்கொள்ளலாம்.
தேநீர் செய்ய:
இப்படி அரும்பெரும் ஆற்றல் கொண்ட, திரிகடுக சூரணத்தை இரு தேக்கரண்டி அளவு எடுத்து, ஒரு பாத்திரத்தில், மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்து, மூன்று டம்ளர் என்ற அளவிலிருந்து, ஒரு டம்ளர் என்ற அளவுக்கு வரும்வரை, சுண்டக் காய்ச்ச வேண்டும். அதன்பின்னர் அந்த நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து, சற்று சூடு தணிந்த பிறகு, சிறுகச் சிறுக பருகி வரவேண்டும். இதுவே திரிகடுக தேநீர் ஆகும்.
இதனால், சித்த வைத்தியத்தில், சுண்டக் காய்ச்சி பருகுவது என்பது மிக சக்தி வாய்ந்த ஒரு நோய் தீர்க்கும் முறையாகும், அதன் அடிப்படையில், நாம் பருகி வரும் இந்த திரிகடுக தேநீர் ஜலதோசத்தை போக்கும், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பருகினாலே, ஜலதோசம் நீங்கி, உடல் நிலை சரியாகிவிடும்.