பிரதமருடன் நாளை சந்திப்பு !!
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் நாளை (10) காலை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேர்தல் தாமதம் தொடர்பில் பிரதமரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தனவை அடுத்த வாரம் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.