செல்ஃபி பிரியர்களுக்கென ஓர் உலகம் !!
எகிப்து தலைநகரான கெய்ரோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘ செல்பி ஹோல்‘ என்னும் கேளிக்கை பூங்காவானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இங்கு பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில் பல்வேறு வகையான தீம்களுடன் செல்ஃபி எடுத்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இணையங்களில் பகிர்வதற்கான படங்களை பல கோணங்களில் எடுத்து காட்சி படுத்தும் விதம் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் இளைஞர்கள் மட்டும் இன்றி பல தரப்பினர் இந்த நவீன செல்பி ஹோலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.