;
Athirady Tamil News

கர்நாடகா தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்க வாய்ப்பு- பொம்மை தகவல்!!

0

கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ம் தேதி முடிவடைகிறது. மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார். இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்று அறிவிக்கப்பட உள்ளது.

ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. காங்கிரஸ் கட்சி 124 தொகுதிகளுக்கான தனது முதல் மற்றும் 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பா.ஜ.க. வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்ற பாஜக தலைமைத் தேர்தல் கமிட்டி கூட்டம் முடிந்ததும் கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஓரிரு நாட்களில் கட்சி அறிவிக்கும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். தேசிய தலைநகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் பாஜக தலைமைத் தேர்தல் கமிட்டி (சிஇசி) கூட்டம் நடைபெற்றது.

பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், “கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஓரிரு நாளில் கட்சி அறிவிக்கும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை” கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கர்நாடக தேர்தலுக்கான ஒட்டுமொத்த பட்டியல் குறித்து ஆலோசித்தோம். ஒருவேளை நாளை மீண்டும் கூட்டம் நடத்தலாம். பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படும். நான் ஷிகாவ்ன் தொகுதியில் போட்டியிடுகிறேன்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.