தவாளிப்புகள்’ தொடர்பில் எச்சரிக்கை!!
தேசிய சாரதிகள் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் ஒன்றில், தவாளிப்புகள் தேய்ந்த டயர்களை பாவிப்பதன் ஆபத்து குறித்து எச்சரித்துள்ளது.
தேசிய சாரதிகள் சங்கத்தின் கருத்துப்படி, வாகன விபத்துகளுக்கு இந்த பழக்கம் முக்கிய காரணமாக இருப்பதுடன் பயணிகளுக்கும் சாரதிகளுக்கும் இது பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.
பாதுகாப்பான பயணத்திற்கு உயர் ரக டயர் பாவனை அவசியமானது என தேசிய சாரதிகள் சங்கம் வலியுறுத்துகின்றது.
டயர்களிலுள்ள தவாளிப்புகள் சாலை மேற்பரப்புடன் ரப்பரை உராய்வதன் மூலம் வழுக்கலை தடுக்கின்றது.
இலங்கையிலுள்ள மேடு பள்ளமான சாலைகளின் சறுக்கலிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஆழமான தவாளிப்புகள் உள்ள டயர்கள் முக்கியமானதாகும்.
துரதிஷ்டவசமாக சில வர்த்தகர்கள் ஒட்டுனர்களை தேய்ந்து போன டயர்களை பாவிக்க ஊக்குவிக்கின்றார்கள். அனுபவம் மிகுந்த ஓட்டுனர்கள் இவற்றைத்ட தவிர்தாலும் சில புதிய ஓட்டுனர்கள் அவற்றை உபயோகப்படுத்துகின்றனர்.
”குறுகிய கால வருமானத்திற்காக இவ்வாறான ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என நாங்கள் அனைவரையும் வலியுறுத்துகின்றோம்.
உங்கள் வாகனத்தின் டயர்களில் தான் உங்கள் உயிரும் உங்களுடன் பயணிப்பவரின் உயிரும் தங்கியுள்ளது” என தேசிய சாரதிகள் சங்க செயலாளர் கயான் தர்ஷன தெரிவித்தார்.