ஜெகன்மோகன் ரெட்டி, பவன் கல்யாண் கட்சியினரிடையே போஸ்டர் யுத்தம்- கட்டிட உரிமையாளர்கள் குமுறல்!!
ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மற்றும் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி கட்சியினர் இடையே போஸ்டர் யுத்தம் ஏற்படுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்களது ஆட்சியின் சாதனைகள் குறித்து போஸ்டர்களில் ஜெகன் அண்ணா எங்கள் நம்பிக்கை என்ற போஸ்டர்களை வீட்டு சுவர்கள் தனியார் கட்டிட சுவர்களில் ஒட்டி வருகின்றனர். ஆளுங்கட்சிக்கு எதிராக ஜனசேனா கட்சியை சேர்ந்தவர்கள் உன் மீது நம்பிக்கை இல்லை ஜெகன்.எங்கள் நம்பிக்கை பவன் என்று போஸ்டர் அடித்து ஆளும் கட்சியினர் எங்கெங்கு போஸ்டர் ஒட்டி இருக்கிறார்களோ அந்த பகுதிகளில் அவர்களுக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். ஜனசேனா கட்சியின் திருப்பதி தொகுதி பொறுப்பாளர் கிரண் ராயல் மற்றும் நகரத் தலைவர் ராஜா ரெட்டி மற்றும் ஜனசேனா கட்சியினர் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஆளும் கட்சியினருக்கும் ஜனசேனா கட்சியினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஜனசேனா கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டரில் 4 ஆண்டுகளில் தலைநகரை உருவாக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கவும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மாநிலத்தை திவால் நிலைக்கு கொண்டு செல்லும் அரசின் மீது நம்பிக்கை இல்லை. பவன் கல்யாணயால் மட்டுமே மாநிலத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும் என அச்சடிக்கப்பட்டு இருந்தது. இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்களும் புதிய கட்டிடங்கள் மற்றும் புதிதாக வர்ணம் தீட்டப்பட்ட இடங்களில் போஸ்டர் ஒட்டி வருவதால் சுவர்கள் அசிங்கப்படுத்தப்படுகின்றன.
எங்களால் அவர்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசமுடியாமல் இருக்கிறோம். இங்கு நடப்பவைகளை அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம். 4 ஆண்டுகளில் வளர்ச்சியின்மையை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். போஸ்டர் ஓட்டுவதன் மூலம் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. இதனால் ஆளும் கட்சிக்கு எந்த பயனும் கிடையாது என தெரிவித்தனர். ஆளுங்கட்சியினருக்கும் ஜனசேனா கட்சியினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள போஸ்டர் யுத்தம் ஆந்திராவில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.