1500 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை !!
பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, பொருட்களை பதுக்கி வைத்தமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 1500 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்கின்றமை, அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றமை உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
விசேட சுற்றிவளைப்பின் போது முட்டை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
விசேட சுற்றிவளைப்புகளுக்காக மேலதிக குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், விடுமுறை தினங்களிலும் இரவு நேரங்களிலும் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.