சீனாவில் 2 மனித உரிமை ஆர்வலர்களுக்கு 10 ஆண்டு சிறை!!
சீன அதிபராக கடந்த 2015ல் பதவியேற்ற ஜின்பிங் 200 வக்கீல்கள், சட்ட ஆர்வலர்களை கைது செய்ய உத்தரவிட்டார். அவர்களில் சிலர் சில மாதங்களிலும், சிலர் கட்டாய மன்னிப்பு கேட்க வைத்தும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், மனித உரிமைக்காக அரசுக்கு எதிராக குரல் கொடுத்த சூ ஜியோங், டிங் ஜியாக்சி என்ற வக்கீல்கள் இருவருக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களில் ஜியோங்கிற்கு 14 ஆண்டுகளும் ஜியாக்சிக்கு 12 ஆண்டுகளும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.