;
Athirady Tamil News

25 வயது இளைஞன் – 62 வயது பாட்டியுடன் திருமணம்; காதலை பேணி காக்கும் 37 வயது வித்தியாசமுள்ள தம்பதி: டிக்டாக்கில் கலக்கும் ஜோடி!!

0

ஜார்ஜியாவில் 37 வயது வித்தியாசமுள்ள 25 வயது – 62 வயது காதல் தம்பதி, தற்போது டிக்டாக்கில் கலக்கி வருகின்றனர். ஐரோப்பாவின் ஜார்ஜியா நாட்டை சேர்ந்த செரில் (62) என்ற பெண்ணும், குரான் மெக்கெய்ன் (25) என்பவரும், கடந்த 2012ம் ஆண்டு ஜார்ஜியாவில் சந்தித்துக் கொண்டனர். 37 வயது வித்தியாசமுள்ள இந்த ஜோடிக்குள் காதல் ஏற்பட்டதால், இருவரும் டேட்டிங்கில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் தங்களது காதல் கதைகளை பற்றிய வீடியோக்களை டிக்டாக் மூலம் வெளியிட்டனர்.

தற்போது இந்த ஜோடியை 41 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். சர்ச்சைக்குரிய இந்த ஜோடிக்கு, சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தாலும் கூட, தங்களுக்குள் இடையிலான திருமண உறவை பேணி பாதுகாத்து வருகின்றனர். இதுகுறித்து டிக்டாக்கில் செரில் வெளியிட்ட பதிவில், ‘காதல் வயப்பட்டவர்களுக்குள் வெறுப்பு ஏற்படலாம். ஆனால் எங்களுக்குள் ஏற்பட்ட அன்பை மற்றவர்களுக்கு விற்க மாட்டோம். எனது மகிழ்ச்சிக்கு குரான் மெக்கெய்ன்தான் காரணம்’ என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.