ஜம்மு காஷ்மீரில் ஜி20 சுற்றுலா கூட்டம் நடத்த பாகிஸ்தான் எதிர்ப்பு!!
ஜம்மு காஷ்மீரில் அடுத்த மாதம் ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டத்தை ஒன்றிய அரசு நடத்த இருக்கின்றது. ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘2023ம் ஆண்டு மே 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஸ்ரீநகரில் ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டத்தை நடத்தும் இந்தியாவின் முடிவிற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றது. இதேபோல் லே மற்றும் ஸ்ரீநகரில் இளைஞர்கள் விவகாரங்களுக்கான ஆலோசனை மன்றத்தில் அடுத்த இரண்டு கூட்டங்களுக்கும் பாகிஸ்தான் அதிருப்தி தெரிவிக்கின்றது.
இது இந்தியாவின் பொறுப்பற்ற மற்றும் சுயசேவை நடவடிக்கைகள் ஆகும். இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் வன்மையாக கண்டிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரானது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சை என்ற உண்மையை இதுபோன்ற நிகழ்வுகளால் ஒருபோதும் மறைக்க முடியாது. சர்வதேச சமூகத்தின் கவனத்தை காஷ்மீரில் இருந்து திசை திருப்ப முடியாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.