புடினின் மரணம் நெருங்கிவிட்டதா – உடல்நிலை குறித்தது வெளியான அதிர்ச்சி தகவல் !!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பார்வை மங்குவதாகவும் நாக்கு மரத்துப்போவதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளன.
தற்போதைய சூழலில், மருத்துவர்களின் ஒரு சிறப்பு குழுவினருடனேயே புடின் பயணம் மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடுமையான தலைவலியால் புடின் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.அத்துடன் பார்வை மங்குவதாகவும் நாக்கு மரத்துப்போவதாகவும் கூறுகின்றனர்.
உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய பின்னர், விளாடிமிர் புடின் தொடர்பில், அவரது நகர்வுகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது ஒரு சமூக ஊடக பக்கம்.
தற்போது, விளாடிமிர் புடின் அவரது வலது கை மற்றும் காலில் பகுதியளவு உணர்ச்சியை இழந்துள்ளார் என அந்த சமூக ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
புடினின் இந்த நிலை அவரது குடும்பத்தினரை பீதியில் தள்ளியுள்ளதாகவும், அவரது மரணம் நெருங்கிவிட்டதோ என அஞ்சுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அந்த ரஷ்ய சமூக ஊடக பக்கம் மட்டுமின்றி, ஸ்பெயின் நாட்டின் பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவலில், 70 வயதான விளாடிமிர் புடின் பார்கின்சன் நோய் மற்றும் புற்றுநோயின் ஆரம்ப நிலைகள் இரண்டையும் எதிர்கொண்டு வருகிறார் என குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, அந்த ரஷ்ய சமூக ஊடகமும், புடினின் தற்போதைய நிலை தொடர்பில் தங்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.