திருப்பதியில் கடந்த 4 நாட்களில் ரூ.17 கோடி உண்டியல் வசூல்!!
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் கூல்ட்ரிங்ஸ் பாட்டில்களை கொண்டு வந்து ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் திருமலை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் மலை போல் குவிந்து வந்தது. மேலும் மாசு ஏற்பட்டு வந்ததால் பிளாஸ்டிக் பொருட்களுக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தடை விதித்தனர்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பிளாஸ்டிக் பிரசாத பைகளுக்கு பதிலாக மக்கும் தன்மை கொண்ட பைகள் மூலம் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காற்று மாசு ஏற்படுவதை தடுக்க இலவச பஸ்களுக்கு பதிலாக பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரானிக் பஸ்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. தேவஸ்தானம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தபோதிலும் சில பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் அங்குள்ள குழாய்களில் தண்ணீர் குடிப்பதை கண்ட அதிகாரிகள் பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டை அறவே ஒழிப்பதற்காக காப்பர் வாட்டர் பாட்டில் மற்றும் ஸ்டீல் வாட்டர் பாட்டிலை பக்தர்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். ரூ.200 வரை பாட்டில் விற்பனை செய்யப்பட்டுகிறது.
ரூ.50 டெபாசிட் செய்தாலும் பாட்டில் வழங்குகின்றனர். இதற்காக தனியாக கவுண்டர்கள் அமைத்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகிறது. இதனால் பக்தர்கள் சுமார் 40 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை 71,782 பக்தர்கள் தரிசனம் செய்து உண்டியலில் 3.28 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். சனிக்கிழமை 85,450 பக்தர்கள் மூலம் 4. 21 கோடி உண்டியல் வசூலானது. ஞாயிற்றுக்கிழமை 86,129 பக்தர்கள் மூலம் ரூ.4.86 கோடியும், திங்கட்கிழமை 69,781 பக்தர்கள் மூலம் ரூ.5.16 கோடி என கடந்த 4 நாட்களில் ரூ.17.51 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.