புற்றுநோயால் பாதிப்பு: பெண்ணுக்கு கை தசையை நாக்கில் பொருத்தி சாதனை!!
இங்கிலாந்தை சேர்ந்த ஜெம்மா வீக்ஸ் என்ற 37 வயதான பெண், நாக்கில் புற்றுநோயால் பாதிக்கப் பட்டார். அவருக்கு நாக்கில் வெள்ளை திட்டுக்கள் தோன்றின. பல ஆண்டுகளில் அந்த பிரச்சினையுடன் இருந்த அவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாக்கில் ஒரு பெரிய துளை உருவானது. இதனால் அவரால் சாப்பிட முடியவில்லை. பரிசோதனையில் அவருக்கு 4-வது நிலை வாய் மற்றும் கழுத்து புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதில் அவர் 90 சதவீத நாக்கின் பகுதியை இழந்திருந்தார். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
நாக்கின் பெரும்பகுதியை அகற்றிவிட்டு, அங்கு கையில் இருந்து திசு ஒட்டுதல்களை எடுத்து நாக்கில் பொருத்தப்படும் என்று தெரிவித்த டாக்டர்கள், மீண்டும் அவரால் பேச முடியாது என கூறினார்கள். இந்த அறுவை சிகிச்சையில் கை தசைகளை நாக்கில் வெற்றி கரமாக டாக்டர்கள் பொருத்தினார்கள். மீண்டும் பேச முடியாது என்று டாக்டர்கள் கூறியிருந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு சில நாட்களில் ஜெம்மாவால் பேச முடிந்தது. அவரை பார்க்க வந்த உறவினர்களிடம் ஹலோ என்று கூறினார். இதுகுறித்து ஜெம்மா வீக்ஸ் கூறும்போது, “அறுவை சிகிச்சைக்கு பிறகு என்னால் பேசவே முடியவில்லை.
அது அப்படியே இருக்கும் என்று டாக்டர்கள் நினைத்தனர். சில நாட்களில் என் வருங்கால கணவரும், மகளும் என்னை பார்க்க வந்தபோது அவர்களிடம் ஹலோ என்று கூறினேன். அந்த குரல் முன்பு போல் இல்லை. ஆனால் அது நல்ல முன் னேற்றமாக இருந்தது. உண்மையில் நான் பேசு வதை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியும் என்றார்.