இந்தியாவை குறிவைக்கும் நேட்டோ – கைவிடப்படுகின்றதா ரஷ்யா..!
உக்ரைன் – ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் நேட்டோவுடன் இணைந்துகொள்வதற்கான அழைப்பொன்று அண்மையில் இந்தியாவிற்கு விடுக்கப்பட்டிருந்தது.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ஆரம்பத்தில் நேட்டோவுக்கான அமெரிக்க தூதுவர் ஜூலியானாஸ்மித் இந்த அழைப்பினை விடுத்திருந்தார்.
இந்தியா ஆர்வமாக இருக்கும் பட்சத்தில் நேட்டோவுடன் இந்தியாவை இணைந்துக்கொள்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டே இருக்குமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தோ – பசுபிக் மற்றும் தெற்காசியாவுடனான நேட்டோவின் உறவு பற்றி பேசும் போதே அவர் இந்த அழைப்பினை விடுத்திருந்தார்.
உக்ரைனுக்கு இந்தியா வழங்கி வரும் மனிதாபிமான உதவிகளை பாராட்டி பேசிய அவர், இந்தியா விரும்பினால் இந்தியாவுடன் மேலும் நெருக்கத்தினை பேண நேட்டோ தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.