அமெரிக்க தற்காப்பு அமைச்சின் இரகசிய தகவல்கள் வெளியீடு – நபர் ஒருவர் கைது!
அமெரிக்காவில் தற்காப்பு அமைச்சின் இரகசியத் தகவல்களை திருடி வெளியிட்டமைக்காக 21 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாக் டக்லஸ் டெக்ஸேய்ரா என அறியப்பட்ட இந்த நபர், மத்திய புலனாய்வுத் துறையால் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் இரகசியத் தற்காப்பு மற்றும் உளவுத் துறை தகவல்களை அவர் வெளியிட்டதாகப் புலனாய்வுத் துறை கூறியுள்ளது.
குறித்த இளைஞர் வான்வழி தேசியக் காவல்படையின் உளவுத்துறையைச் சேர்ந்தவர் என தற்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேசமயம், உக்ரைனியப் போர் பற்றிய சர்ச்சைக்குரிய தகவல்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இரகசியத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த தகவல்கள் யாவும் Discord எனும் விளையாட்டுத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.