;
Athirady Tamil News

அரசியலுக்காக தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்- துரைமுருகன் பேட்டி!!

0

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதைதொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க.வில் உள்ள பெரும் தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதை நான் பார்க்கவில்லை, எனக்கு அது தெரியாது. இதையெல்லாம் அரசியலுக்காக அவர் செய்கிறார். காவிரி-குண்டாறு இணைப்பை நாங்கள் தான் செய்து வருகிறோம். வெளிநாட்டில் நிதி வாங்கி பணிகளை செய்து வருகிறோம். தற்போது கால்வாய் வெட்டும் பணி நடந்து வருகிறது. சுமார் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. நிச்சயம் காவிரி-குண்டாறு இணைப்பு செயல்படுத்தப்படும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.