துபாயில் அமீரக திமுக நடத்திய கிராண்ட் இஃப்தார்! திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா பங்கேற்பு!!
துபாயில் அமீரக திமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் ‘தமிழன் வழிப்பாடு’ நூல் அறிமுக விழா கிரவுண் பிளாஸா ஹோட்டலில் நடைபெற்றது. அமீரக திமுக பொறுப்பாளரும், புலம் பெயர் தமிழர் நலவாரிய உறுப்பினருமான எஸ்.எஸ். மீரான் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக அயலக அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எம்.எம். அப்துல்லா கலந்து கொண்டார்.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் இஃப்தார் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது தான்.
இதனிடையே உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பொருளாளர் ராஜா தமிழ்மாறன் எழுதிய ‘தமிழன் வழிப்பாடு’ நூலை தொழில் அதிபர் எஸ்ஸா அப்துல்லா அல் குரைர் மற்றும் மிர்சா ஹுசைன் அல் ஷேக் இணைந்து வெளியிட அதனை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா பெற்றுக் கொண்டார்.
தமிழர் கலாச்சாரமும் இஸ்லாமிய வாழ்வியலும் இயைந்திருப்பதை சுட்டிக்காட்டிய தமிழன் வழிபாடு நூல் ஆசிரியர் ராஜா தமிழ்மாறன், நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளை மேற்கொள்காட்டி பேசி கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் மனதை கவர்ந்தார். அவ்ரைத் தொடர்ந்து பேசிய திமுக எம்.பி. அப்துல்லா, ஒருவருடைய நாடு மாறலாம், மதம் மாறலாம், ஆனால் மொழி அடையாளம் மட்டும் ஒருபோதும் மாறவே மாறாது என்று குறிப்பிட்டார். மொழி தான் தமிழனின் முகவரி என்று குறிப்பிட்ட அவர், கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களையும், அதனை மேம்படுத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ளும் முயற்சிகளையும் குறிப்பிட்டு பேசினார்.
மாநிலங்களவை உறுப்பினராக பிறகு முதல்முறையாக எம்.எம்.அப்துல்லா துபாய் சென்றதால் அவருக்கு அமீரகத் திமுக சார்பில் தடபுடலான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், இந்திய தூதரக அதிகாரி பாலாஜி ராமசாமி, பிளாக் துலிப் நிர்வாக இயக்குனர் இம்ரான், பவர் குரூப் நிர்வாக இயக்குனர் ஜாகிர் ஹுசைன், அமீர் கான், ஈமான் துணைத்தலைவர் கமால், ஆட்டோவிஷன் நிர்வாக இயக்குனர் பைரோஸ் , இடிஎ புஹாரி, ஸ்கைசீ அஸீம், வி எப் எஸ் சீனிவாசன், பரக்கத் அலி, அப்துல் மாலிக், தேங்கை சர்ஃபுதீன், லியாகத் அலி, பிர்தெளஸ் பாஷா, மொஹைதீன் பாஷா, கவிதா சோலையப்பன், தமிழ்துளி ப்ரியா, பெனாசிர் ஃபாத்திமா, மஞ்சுளா யுகேஷ், ஸ்ரீதேவி சிவாநந்தம், திருச்சி லட்சுமி ப்ரியா, உள்ளிட்ட பலரும் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை ஜவேரியா ரஷீது, ஜெஸிலா பானு, கடையநல்லூர் முஸ்தஃபா, ஏஜிஎம் பைரோஸ், வி.எம்.பிரபு, இளமுருகன், அன்பு, செந்தில் பிரபு, பருத்தி இக்பால், பொறியாளர் பாலா, ஆர்.ஜே.அஞ்சனா ஆகியோர் அடங்கிய குழு ஒருங்கிணைத்திருந்தது.