மதுபான கொள்கை முறைகேடு வழக்கு – டெல்லி முதல் மந்திரி 16ம் தேதி ஆஜராக சிபிஐ சம்மன்!!
டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல் மந்திரியாக மணீஷ் சிசோடியா செயல்பட்டு வருகிறார். மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புதிய மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.