ராணுவ அதிகாரிகளை மிரட்டிய வழக்கு இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ராணுவ அதிகாரிகளை மிரட்டும் விடுத்து அவர்களின் குடும்பத்தினருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். விசாரணைக்கு ஒத்துழைப்பதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி வரும் 26ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் உள்ளூர் நீதிமன்றத்தை அணுகி ஜாமீனை நீட்டித்து கொள்ளலாம் என நீதிபதி தெரிவித்தார். அதன் பின் பேசிய இம்ரான், ‘‘உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் பஞ்சாப் சட்ட பேரவைக்கு தேர்தல் நடத்தாமல் இருப்பது பாகிஸ்தானுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளது’’ என்றார்.