இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசியவருக்கு தண்டனை!!
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கடந்த ஆண்டு வட கிழக்கு நகரமான யார்க்கிற்கு சென்றார். அவர் சாலையில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது மன்னர் சார்லசை நோக்கி வாலிபர் ஒருவர் முட்டை வீசினார். அந்த முட்டை, சார்லஸ் அருகே விழுந்தது. முட்டையை வீசிய பேட்ரிக் தெல்வெல்லை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதுதொடர்பாக வழக்கு யார்க் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவில் தலைமை மாஜிஸ் திரேட்டு நீதிபதி பால் கோல்ட்ஸ் பிரிங் தீர்ப்பு அளித்தார். அதில் பேட்ரிக் தெல்வெல்லை குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி, அவர் 100 மணிநேரம் ஊதியம் பெறாத சமூகப் பணிகளை செய்ய வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.