34 ரயில் சேவைகள் ரத்து!!
ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் 34 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு விடுமுறைக்காக சென்ற ஓட்டுனர்கள் இன்று சமூகமளிக்காததால் குறித்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
இன்றைய நாளுக்குள் ரத்து செய்யப்படும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.