அரசியலுக்கு வரும் ஜானக்க ரத்நாயக்க!!
சில நிபந்தனைகளின் கீழ் அரசியலில் பிரவேசிக்கத் தான் தயாராக இருப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு பிரஜைக்கும் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் தரக் கூடிய ஒரு திட்டத்தை முன்வைக்க எனக்கு வாய்ப்புத் தரப்பட்டால் , நாட்டை ஒரு சிறந்த இடமாக மாற்ற நான் தயாராக இருக்கிறேன். மக்கள் சிறந்த நிர்வாகத்தையும் பக்கச்சார்பற்ற ஒருவரையும் எதிர்பார்க்கின்றனர்.
சில குடும்பங்களும் சில தேர்ந்த அரசியல்வாதிகளும் 75 வருடங்களாக விளையாடி வருகின்றனர்.
எனவே அனைவரது வேண்டுகோளுக்கேற்ப அந்த மாற்றத்தை ஏற்படுத்த நான் தயாராக இருக்கின்றேன் என நினைக்கின்றேன்” என அவர் தெரிவித்தார்.