பாகிஸ்தான் ராணுவம் ஊழலுக்கு துணை போகிறது: இம்ரான் கான்!!
பாகிஸ்தான் ராணுவம் தற்போது ஊழல் மாஃபியாக்களுக்கு துணையாக செயல்படுகிறது என இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று தொண்டர்களிடையே பேசும் போது, “பாகிஸ்தான் அரசியலில் மிகவும் சக்தி வாய்ந்த நபர் ராணுவ தளபதி. அவருடைய உத்தரவுகளை அனைவரும் பின்பற்றுகின்றனர்.
இத்தகைய மதிப்பு மிக்க ராணுவம், நான் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காக ஊழல் மாஃபியாக்களான ஷெரீப்புகளுக்கும், சர்தாரிகளுக்கும் துணை போகிறது ” என்று தெரிவித்தார்.