சீனாவின் யுனான் மாகாணத்தில் 5 நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவிரம்..!
சீனாவின் யுனான் மாகாணத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். யுனான் மாகாணத்தில் உள்ள உக்சி நகரில் காட்டு தீயானது கடந்த 5 நாட்களாக கடுமையாக எரிந்து வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை வைக்கண் என்ற கிராமத்தில் பற்றிய தீ காற்றின் வேகம் காரணமாக மளமளவென பரவி உள்ளது. 145 பேர் கொண்டு குழுவினர் தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
தீ பற்றிய காட்டு பகுதிக்கு அருகே வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒருசில இடங்களில் தீ கட்டுக்குள் வந்துள்ள நிலையில் கொழுந்துவிட்டு எரியும் அடர்ந்த பகுதியில் தீயை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது.