;
Athirady Tamil News

குரோம்பேட்டையில் கட்டப்படும் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக செயல்படும்- அமைச்சர் அறிவிப்பு!!

0

குரோம்பேட்டை அரசு மருத்துவமனை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா? என்று பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- குரோம்பேட்டை அரசு மருத்துவமனை 213 படுக்கை வசதி கொண்ட மருத்துவ மனையாக உள்ளது. இங்கு விபத்து அறுவை சிகிச்சை, மகப்பேறு, டயாலிசிஸ், ரத்த வங்கி, ஆய்வக பரிசோதனை உள்ளிட்ட போதுமான கருவிகளும் உள்ளது.

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி கடந்த ஆண்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக இதை தரம் உயர்த்த 400 படுக்கைகளுடன் 2 லட்சத்து 27 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் ரூ.110 கோடியில் மருத்துவமனை கட்டும் பணியை கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டதும் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையாக இயங்கும். இ.கருணாநிதி எம்.எல்.ஏ.:- 1972-ல் கலைஞரால் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை 50 ஆண்டுகளுக்கு பிறகு அதை தரம் உயர்த்தும் வகையில் ரூ.110 கோடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தந்து கட்டுமானப் பணியை தொடங்கி வைத்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கிறேன். மழை காலத்தில் இந்த ஆஸ்பத்திரியில் 4 அடிக்கு தண்ணீர் நிற்கும் சயங்களில் அதை வெளியேற்ற சிரமப்பட்டு வந்தனர். இதற்கு தீர்வு கிடைக்கும் வகையில் புதிய ஆஸ்பத்திரி கட்டப்படுகிறது. எனவே பழைய இடத்தில் உள்ள கட்டிடத்தில் 4 ஏக்கரில் புதிய மருத்துவ மனையை உருவாக்க அரசு முன் வருமா? மேலும் அனகாபுத்தூர், திருநீர்மலையில் ஆரம்ப சுகாதார மையங்களின் தரம் உயர்த்தப்படுமா?

அமைச்ர் மா.சுப்பிரமணியன்:- குரோம்பேட்டை மருத்துவமனையில் தாழ்வான பகுதிக்கு பக்கத்தில் உள்ள புதிய மைதானத்தில் புதிய மருத்துவ மனை கட்டப்படுகிறது. இது அனைத்து வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையாக இயங்கும். அனகாபுத்தூர், திருநீர் மலை, கீழ்க்கட்டளை, ஜமீன் பல்லாவரம், பொழிச்சலூர், பழைய பல்லாவரம், ஜமீன் ராயப்பேட்டை பகுதிகளில் 10 மருத்துவ கட்டிடங்கள் ரூ.11 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.